maraikal
MUM
"
                திருவருகைக்கால நான்கு மெழுகுவர்த்திகள் (கிறிஸ்மஸ் வந்தாச்சு)

 
 
திருவருகைக்காலம் நம் கத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு ஆண்டுகாலம் திருவருகை காலத்திலிருந்து துவங்குகின்றது. கிறிஸ்து அரர் பெருவிழாவிற்கு அடுத்த வாரம் ஞாயிறு அன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு துவங்கும். திருவருகைக் காலத்தில் மொத்தம் நான்கு வாரங்களை உள்ளடக்கியது. பெரும்பாலும் திருவருகை காலத்தின் முதல் ஞாயிறு நவம்பர் மாதம் 27-ம் தேதியோ அல்லது நவம்பர் மாதம் 30-ம் தேதிக்குள்ளாகவோ துவங்கி டிசம்பர் 24-ம் தேதியோடு முடிவடையும். திருவருகைக்காலம் என்பது ஆங்கிலத்தில் “Advent” என்று அழைக்கப்படுகிறது. “Advent” என்றால் “Coming” அல்லது "Arrival” என்று அர்த்தம். அதாவது இது “வருகை” அல்லது “வருகை புரிதல்” என்பதாக பொருள்படும். திருவருகைக்காலம் முழுவதுமே வரலாற்றில் நிகழ்ந்த ஆண்டவரின் முதல் வருகை பற்றியும் மீண்டும் நிகழ இருக்கும் அவரின் இராண்டாம் வருகைக்காக நம்மையே தயார்படுத்துவதை பற்றியது ஆகும். எனவே திருவருகைக்காலத்தை நாம் இரண்டு பகுதியாக பிரிக்கலாம்.


1. முதல் பகுதி திருவருகைக்கால முதல் ஞாயிறு துவங்கி டிசம்பர் 15-ம் தேதி வரை. இதில் நாம் ஆண்டவரின் இரண்டாம் வருகையை பற்றி சிந்திப்போம். இந்த குறிப்பிட்ட வார நாட்களிலோ அல்லது ஞாயிறு நாட்களிலோ நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறைவார்த்தைகள் அனைத்துமே ஆண்டவரின் இரண்டாம் வருகையை பற்றி அமைந்திருக்கும்.


2. இரண்டாம் பகுதி டிசம்பர் 16-ம் தேதி துவங்கி டிசம்பர் 24-ம் தேதி வரை. இதில் நம் ஆண்டவரின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகளை நாம் தியானிப்போம்.

திருவருகை கால மைய சிந்தனை திருவருகைக் காலத்தின் இறைவார்த்தைகள் நமக்கு ஒரு சில முக்கியமான செய்திகளை தருகின்றது. அவை விழிப்பாய் இருத்தல், தயாராக இருத்தல், எதிர்நோக்கி இருத்தல், காத்திருத்தல், மனம் தெளிந்திருத்தல், மனம் திறந்திருத்தல் போன்றவை.


மேலும் திருவருகைக்காலம் நம் கடந்த மற்றும் எதிர்கால வாழ்வை பற்றி யோசித்து பார்க்கவும், நடந்ததை சீர்தூக்கி பார்த்து, இனி எதிர்கொள்ள போவதற்கு நம்மையே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் நமக்கு நினைவுப்படுத்துகிறது. எனவே திருவருகைக் காலம் ஆண்டவருக்கான “எதிர்பார்ப்பு” மற்றும் அவருக்கான "காத்திருப்பு" இவற்றை மையப்படுத்தியது. இந்த எதிர்பார்ப்பும் காத்திருப்பும் அர்த்தம் பெற நாம் செய்ய வேண்டியது. கடவுள் நமக்கு கட்டளையிட்டு அறிவுறுத்தியதை முழுமனதோடு செய்வது. அதாவது
1. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வது,
2. நம்மை நாம் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது, இந்த இரண்டு கட்டளைகளை நாம் சரியாய் செய்தாலே ஆண்டவருக்கான நம்முடைய எதிர்பார்ப்பும், காத்திருப்பும் உண்மையான அர்த்தமடையும். நம் வாழ்வும் புது மாற்றம் பெறும்.


திருவருகைக்கால 4 மெழுகுத்திரிகள் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு முன் வரும் திருவருகை காலத்தின் நான்கு வாரங்களின் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருப்பலி கொண்டாட்டத்தில் மெழுகு திரிகளை ஏற்றுவது நம் பழக்கம். அதனடிப்படையில் முதல் வாரம், இரண்டாம் வாரம், மற்றும் நான்காம் வாரங்களில் ஊதா நிறத்தினால் ஆன மெழுகுவர்த்தியையும், கிறிஸ்து பிறப்பு விழா அன்று வெள்ளை நிற மெழுகுவர்த்தியும் நாம் ஏற்றுகின்றோம். இந்த மெழுகுவத்திகள் நமக்கு தரும் செய்தி என்ன?


திருவருகைக்காலம் முதல் ஞாயிறு (ஊதா நிறம்)


நம்பிக்கையின் ஞாயிறு இந்த மெழுகுத்திரி நம்பிக்கையை அடையாளப்படுத்தும் மெழுகுத்திரி, கடவுள் நம்பிக்குக்குரியவராய் இருக்கிறார். அவர் நமக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறார். எனவே நமது நம்பிக்கை கடவுளிடமிருந்து வருகிறது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும். உரோ 10:11-ல் "அவர் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளவாவதில்லை” என்று வாசிக்கின்றோம். ஆண்டவர் மீது நம்முடைய

 முழு நம்பிக்கையை வைக்கவும், அந்த நம்பிக்கையின் வழியாய் வாழ்வில் நம்பிக்கை இழந்தோர்க்கு நாம் நம்பிக்கையின் அடையாளமாக மாறிடவும் இந்த ஊதா நிற மெழுகுத்திரி ஏற்றப்படுகிறது.


இரண்டாம் ஞாயிறு (ஊதா நிறம்


தயாரிப்பின் ஞாயிறு இந்த மெழுகுத்திரி தயாரிப்பை அடையாப்படுத்தும் மெழுகுத்திரி "ஆண்டவருக்காக வழியை ஆயத்தப்படுத்துங்கள்” (லூக் 3:4) என்ற எசாயாவின் (எசா 40:3-5) குரலை நாமும் கேட்போம். நமக்காக மீட்பர் பெத்லகேமில் பிறக்க இருக்கின்றார், என்றும் மெசியாவின் வருகைக்காக உங்களையே தயார்ப்படுத்துங்களென்று யோவானும், எசாயாவும் மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்கள். அதே போன்று மீட்பரின் வருகைக்காக நம்மையே நாம் தயார்படுத்த, ஆயத்தப்படுத்த வேண்டும் என்ற அழைப்பை திருவருகை காலத்தின் இரண்டாம் ஞாயிறு நமக்கு விடுக்கிறது. இந்த தயாரிப்பை, ஆயத்தமாதலை வெளிப்படுத்தும் விதமாக திருவருகை காலத்தின் இரண்டாம் ஞாயிறு அன்று ஊதா நிற மெழுகுத்திரி ஏற்றப்படுகிறது.

மூன்றாம் ஞாயிறு இளஞ்சிவப்பு நிறம்)


மகிழ்ச்சியின் ஞாயிறு மீட்பராம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பை, அவர் பிறப்பின் மகிழ்ச்சியை இடையர்களுக்கும், உலகத்திற்கும் அறிவிப்பதில் வானத்தூதர்கள் பெருமகிழ்வு கண்டார்கள். இதை தான் நாம் லூக் 2:814-ல் வாசிக்கின்றோம். இந்த மகிழ்வின் நற்செய்தியை கேட்ட இடையர்களும், பெத்லகேமுக்கு விரைந்து சென்று பிறந்திருக்கும் குழந்தையை பார்த்து அவர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் நமதாக வேண்டும் என்பதை குறிக்கும் விதமாக திருவருகைக் காலத்தின் மூன்றாம் மெழுகுத்திரி ஏற்றப்படுகிறது. மீட்பர் நமக்காக மனுவுருவானார் என்ற நம்பிக்கையுடன், மகிழ்ந்து கொண்டாட இத்திருவருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறன்று இளஞ்சிவப்பு நிற மெழுகுத்திரி ஏற்றப்படுகிறது.

நான்காம் ஞாயிறு (ஊதா நிறம்)


அன்பின் ஞாயிறு இந்த மெழுகுத்திரி அன்பை அடையாளப்படுத்தும் மெழுகுத்திரி. கடவுள் தம் மகனையே இவ்வுலகிற்கு அனுப்பினார். அந்த அளவிற்கு கடவும் நம்மை அன்பு செய்கிறார். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொரு முறையும் அவர் நம்மீது கொண்டிருந்த அன்பை நமக்கு உணர்த்துகின்றது.

 இதை அடையாளப்படுத்தும் விதமாகவே திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறன்று நாம் அன்பின் மெழுகுத்திரியாகிய ஊதா நிறத்திலான மெழுகுத்திரியை ஏற்றி அன்பின் ஞாயிறாக கொண்டாடுகின்றோம்.
"அன்பே அகிலத்தை மாற்றும்! சமாதானத்தை வழங்கும்” -
(புனித இரண்டாம் அருள் சின்னப்பர்)


 


 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                               

 

 

 

 


 


 
Free Blog Widget
Stats Counter
hit counter