TAMIL CATHOLIC PAGE - FRANCE

maraikal
MUM
நாளுக்கொரு வசன

அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். லூக்கா: 21:27     

 
 

இளையோர்

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 


        ஒப்புரவு அன்னை ஆலயம் 
       பெல்வில் -
France

      மூவேளை செபம்   

 வாழ்க வளனே
 
புனித தந்தை சூசையே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

புனித சூசையப்பருக்கு ஒன்பது நாள் நவநாள்
 

 

 இன்றைய புனித பாடகர் குழாமின் பாதுகாவலி புனித செசிலியாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 இசைக்கருவி மீட்டுபவர்கள் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் ஓலி ஒளி அமைப்பாளர்கள் பொறுப்புடனும் பொறுமையுடனும் பல இடர்களை தாண்டி வழி நடத்தும் அன்பு உள்ள அனைத்து பணித்தள பாடகர் பாடகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 

தேசிய தலைமைக் குருவும் அனைத்து உறுப்பினர்களும் வருடாந்த கூட்ட முடிவில் எடுத்த படம்- 2021

திருவருகைக்காலம்

   

 திருவருகைக்காலத்தில் நான்கு கிழமைகள்தான் இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பை எதிர்பார்து காத்திருக்கும் நாம் அனைவரும் இறைமகன் இயேசு நமது உள்ளங்களிலும் இல்லங்களிலும் பிறந்தருள நம்மை நாமே ஆயத்தமாக காத்திருப்போம். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது, இன்றைய உலகில் பலரது பழிதீர்க்கும் மந்திரம். இதற்கு நேர்மாறாக, பார்வையற்றோருக்குப் பார்வை வழங்கி, ஊனமுற்றோரை முழுமையாக்கி, பழியைத் தீர்க்கும் மந்திரங்களும், வழிகளும், உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் நாம் இத் திருவருகைக்காலத்தில் இறைமகன் நமக்கு கூறிய நல் வழிகளை நாம் முன்னெடுப்போம். இறைவா, நாங்கள் விழிப்பாயிருந்து உம் வரவை எதிர்கொள்ள அருள்தாரும்.
 

திருவருகைக் கால மெழுகுவர்த்திகள்
 


“ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்”(மத்தேயு: 24: 44)


கிறிஸ்துவின் பிறப்பு உலக வரலாற்றில் நடந்து முடிந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் மீட்புப் பணியின் முதற் கட்டமாகிய அவரின் மனிதப்பிறப்பை நாம் தியானித்து ஞானநன்மைகபை பெற தாய் திருச்சபை ஒரு குறிப்பிட்ட காலத்தை பிரித்துள்ளது. இதுவே திருவருகைக் காலம். மேலும் கிறிஸ்துவின் மகிமையான இரண்டாம் வருகையை எதிர்நோக்கி நமது வாழ்வை செம்மை செய்யவும், பாவங்களுக்கு தக்க பரிகாரம் செய்து தூய்மையான நிலையில் அவரை நம் உள்ளங்களில் மீண்டும் பிறக்கச் செய்யவும் வாய்ப்பளிக்கும் வகையில் இக்காலம் அமைந்துள்ளது. இஸ்ராயேல மக்கள் மெசியாவின் வருகைக்கு ஆண்டாண்டு காலமாய் காத்திருந்தது போல நாமும் காத்திருப்போம். அன்று இயேசு மொழிந்த பத்து கன்னியர் உவமையில் விளக்குகளுடன் அக்கன்னியர்  மணமகனின் வருககக்காக காத்திருந்தனர்.


நாமும் விளக்கு ஏற்றி அவருக்காக காத்திருக்க வேண்டும் என்ற நோக்குடன் விளங்கும் ஒரு வெளியடையாள செயலே, திருவருகைக்கால செழுகுவர்த்திகள் ஏற்றும் முறை. இவ்வழக்கம் பல ஆண்டு காலமாய் நம் கத்தோலிக்க மரபில் இருந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு செழுகுவர்த்தி ஏற்றப்படும். இந்த திருவருகைக் காலத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடி ஒளியாம் கிறிஸ்துவை நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒளியுடன் வரவேற்போம்.

முதல் வாரம் (ஊதா நிறம்)
இதுதான் நம்பிக்கையின் மெழுகுவர்த்தி. இது மீட்பரின் வருகைக்காக காத்திருந்த நம் முதுபெரும் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரைக் குறிக்கின்றது. “கவனமாய் இருங்கள், விழிப்பாய் இருங்கள். ஏனெனில் அந்ந நாள் எப்போது வருமென உங்களுக்கு தெரியாது.” (மாற்கு 13: 33)


ஆண்டவர் நம்மை விழிப்புடன் காத்திருக்கும்படி கேட்கின்றார்.
ஆனால் நாமோ உலக கவலைகளிலும் கவர்ச்சிகளிலும் மனங்களை செலுத்தி வாழ்ந்து வருகின்றோம். இனியாவது, “ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கின்றேன்” என்று கூறி அவரின் வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்துவோம்.

செபம்:

இம்மானுவேலே! இயேசுக்கிறிஸ்துவே!
எல்லா நாடுகளும் எதிர்பார்க்கும் ஆண்டவரை அனைத்து மக்களின் மீட்பரே! வந்து எங்களிடையே தங்கும். ஆமென்.

இரண்டாம் வாரம் (பச்சை நிறம்)
இதுதான் அமைதியின் மெழுகுவர்த்தி. மீட்பரின் வருகை, வரும் காலம், அவரின் இயல்புகள் போன்ற அனைத்து செய்திககளயும் தந்த இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா, தானியேல் போன்றோரைக் குறிக்கிiது. “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” (மத்தேயு 3: 1)

இறைவாக்கினர்கள் அகைவரும் மீட்பரின் வருகைக்காக நாம் எவ்வகை தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்துள்ளனர்.

நாம் அனைத்தையும் அறிந்திருந்தும் நம் வலுவின்மையாலும், விசுவாச குறைவாலும் மீண்டும் மீண்டும் ஆண்டவரை விட்டு விலகி செல்கின்றோம். இனியாவது அவரில் நம்பிக்கை கொண்டு அவரை நாடி தேடுவோம்.

செபம்:

ஓ இயேசுக்கிறிஸ்துவே! அனைத்து உலகங்களின் அரசரே! எல்லா இதயங்களின் மகிழ்ச்சியே! விரைவில் வந்து உம் மக்ககள மீட்டருளும். ஆமென்.


மூன்றாம் வாரம் (ரோஸ் நிறம்)
இதுதான் மகிழ்ச்சியின் மெழுகுவர்த்தி. இது மீட்பரின் முன்னோடியான புனித திருமுழுக்கு யோவானைக் குறிக்கிiது. “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகின்றது: ஆண்டவருக்காக வழிழை ஆயத்தமாக்குங்கள், அவருக்காக பாதையை செம்iயாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும், மலை குன்று யாவும் தாழ்த்தப்படும், கோணலானவை நேராக்கப்படும், கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்” (லூக்கா 3: 4 - 6)
நாம் மீட்பின் காலத்தை நெருங்கிவிட்டோம்.

திருமகன் கிறிஸ்துவை அறச்செயல்கள் நிறைந்த வாழ்வினால் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றாமா? அவர் வரும்போது அவரது வலப்பக்கம் நிற்கவும், விண்ணரசை அடையவும் ஏற்புடையவர்களாவோம்.

செபம்:

உலகத்தின் ஒளியே! உண்மையின் சுடரே! இயேசுக்கிறிஸ்துவே வந்தெம்மை தேற்றும். ஆமென்.நான்காம் வாரம் (சிவப்பு நிறம்)
இது அன்பின் மெழுகுவர்த்தி. அன்னை மரியாவையும் அவர் கணவர் புனித யோசேப்பையும் குறிக்கின்றது. “அவர் பெரியவராய் இருப்பார்;, உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது.” (லூக்கா 1: 32-33)

மீட்பரை சந்திக்க அன்கை மரியாவும் புனித யோசேப்பும் எவ்வாறு ஆயத்தமாய் இருந்தனரோ, அவர்களைப் போல நம்மை மீட்க வந்த பாலனை வரவேற்க நம்மை தயார்படுத்த இதுவே இறுதி வாய்ப்பு.


அன்கையின் எதிர்நோக்கையும் புனித யோசேப்பின் நேர்மைத்தனத்தையும் கொண்டு வாழ முயல்வோம்.

செபம்:
உலகை கடந்த ஞானமே! உண்மை கடவுளின் வார்த்தையே! இயேசுக்கிறிஸ்துவே! வந்து மீட்பின் பாதையை எமக்கு காட்டும். ஆமென்.


திருவருகைக் கால செபமாலை

மூவேளை செபம்
நம்பிக்கை அறிக்கை

1. புனித இறை அன்னையே! நீர் குழந்தை இயேசுவுக்கு தாயாக முன்குறிக்கப்பட்ட நேரம் புனிதமானது என்று அனைவரும் இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்
(1 விண்க 10 அருள் 1 தந்தை)

2. புனித இறை அன்னையே! நீர் குழந்தை இயேசுவை பெற்ற நேரம் புனிதமானது என்று அனைவரும் இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்
(1 விண்க 10 அருள் 1 தந்தை)

3. புனித இறை அன்னையே! நீர் குழந்தை இயேசுவை முதல் முகை கட்டித்தழுவிய நேரம் புனிதமானது என்று அனைவரும் இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்
(1 விண்க 10 அருள் 1 தந்தை)

4. புனித இறை அன்னையே! நீர் குழந்தை இயேசுவை முதல் முறை பால் கொடுத்த நேரம் புனிதமானது என்று அனைவரும் இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்
(1 விண்க 10 அருள் 1 தந்தை)


எதிர்நோக்கி காத்திருந்த அன்னையிடம் செபம்

முதல் பெற்றோர் வழி பிறந்த அனைத்து மானுடரிலும் உலக மீட்பர் இயேசுக்கிறிஸ்துவுக்கு தாயாய் இருக்க இறைவனால் முன்குறிக்கப்பட்டவரும், அதற்காக வேண்டிய அனைத்து வரங்களையும் முழுமையாய் அடைந்தவரும், அடைந்த வரங்களைக் கொண்டு நடத்திய தூய வாழ்வினால் மகனாகிய இகைவன் உம்முடைய திருவயிற்றில் தூய ஆவியாரால் கருத்தரிக்க தெரிந்து கொள்ளப்பட்ட அன்னையே! உம்முடைய மகன் பிறக்கப்போகிற நாள் நெருங்கி வருகின்றது என்று நீர் அறிந்து, அவரைப் பார்க்கவும், அவருக்கு பணிவிடை புரியவும், உமக்கிருந்த ஆசையைப் பார்த்து, எனக்கும் இந்தத் திருநாளில் அவர் பேரில் ஆசை வரவேண்டும் என்றும், அவரைப் பார்த்து, அவருக்கு திருப்பணியாற்ற நீர் தகுதியாக இருக்க வேண்டும் என்று செய்த முன் தயாரிப்பை தியானித்து நானும் அவருக்கு ஏற்ற பணி செய்ய என்னையே ஆயத்தம் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகிறேன். நீர் செய்தது போல் என்னால் செய்ய முடியாவிட்டாலும், நான் இந்த நாளை சிறந்த முன் தயாரிப்புக்களுடன் எதிர்கொள்ள எனக்கு கற்றுத்தாரும். செபம், தபம், தர்மம் என்று இந்த திருவருகைக் காலத்தில் என் இதயக் குடிலை அலங்கரிக்க எனக்காக பரிந்து பேசும். ஆமென். 

பணித்தளத் திருப்பலிகள்

28- 11-2021 - புனித சிசிலியா திருவிழா
11:30 Chapelle NDR. de Belleville – 75011 - Paris

 


 

 

✝ அறிவித்தல் ✝


அன்பான உறவுகளுக்கு வணக்கம்.

இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தினால் மூன்றாவது சனிக்கிழமைகளில் ஒழுங்கு செய்யப்படும் திருப்பலி 21.08.2021 சனிக்கிழமை மாலை 18.00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்.

வருகை தருபவர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டதற்கான பத்திரத்துடன் (Pass sanitaire) வரும்படி  கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி
 

இடம் : Notre-Dame de France
Chemin Notre-Dame de France
95560 - Baillet-en-France

 

video/Fatima.mp4

மரியன்னையின் பிறப்பு

 

தவக்காலத் தியானங்களை இடப்பக்கமுள்ள தவக்காலம் என்னும் பகுதியை அழுத்தி பார்க்கமுடியும்
 

      தன்னை நேசிப்பது போல பிறரை நேசி Mp4
 
 அன்பான உறவுகளே!

எங்களது வாழ்வியலையும், உடல் உள ஆரோக்கியத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கின்ற இந்த இக்கட்டான காலகட்டத்தில், வதிவிட உரிமையை (விசா) இன்னும் பெறாதவர்களுக்கும்,  கடினமான குடும்ப நிலையில் குழந்தைகளுடன் வாழ்பவர்களுக்கும், முதியவர்களுக்கும், உறவினர்களின் உதவிகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கும் உதவி செய்ய நாங்கள் முன்வந்துள்ளோம்.


உங்கள் ஒவ்வொரு குடும்பங்களிலும் குறிப்பிட்ட நிலைகளில் இருந்து உதவி தேவைப்படுபவர்கள்: கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


Père: Paul Matthew MATHANRAJ

Aumônerie Tamoule Catholique Sri Lankaise
57 Boulevard de Belleville
75011 Paris
Tel: 0148069505


உங்களது நலத்திற்காகவும், மன உறுதிக்காகவும், இந்த சோதனைக்காலத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வருவதற்காகவும் இறைவேண்டல் செய்கின்றோம்.
- நன்றி -

 

 

 

அன்பு இயேசுவே! என் அகக்கண்களைத் திறந்து உண்மையின் தெய்வத்தைக் காணும் வரம் தாரும். ஆமென்

 

 

 

    

இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் - பிரான்ஸ்

                                 

Free Blog Widget
Stats Counter
hit counter