maraikal
MUM
 
               மரியாயின்சேனை  - Legion of Mary
மரியாயின்சேனை வரலாறு
 சேனையாளர்கள் சேவைகள் சேனையின் நோக்கம் சேனைக்கீதம்
பாரீஸ் - மரியாயின்சேனை அங்கத்தவர்கள் மரியாயின் சேனை - நிழற்படங்கள
FRANK DUFF Born 7 June 1882

Founded Legion of Mary 7 September 1921  

 Died November 1981

 


உருவாக்கம்:
1921 (ஃபிராங் டாஃப்)

மரியாயின் சேனை நிறுவனர்
பிராங்க் டஃப் 1889 ஜூன் திங்கள் 7-ம் நாள் அயர்லாந்து நாட்டிலுள்ள டப்ளின் நகரில்; பிறந்தார். தமது 18-ம் வயதில் அரசு உயர்பணியில் சேர்ந்தார். இருபத்திநான்காவது வயதில் தூய வின்சென்ட் தே பவுல் சபையில் சேர்ந்து அதன் வாயிலாக தனது கத்தோலிக்க விசுவாசத்தில் ஆழமான மன உறுதி கொண்டார். அத்துடன் ஏழை எளியவர்கள், மற்றும் சமுதாயத்தில் நலிவுற்றவர்களின் தேவைகளில் பரிவும், அக்கறையும் கொண்டார். 1921 செப்டம்பர் 7-ம் நாள் சில கத்தோலிக்க பெண்கள் மற்றும் டப்ளின் உயர் மறை மாவட்டத்தைச் சார்ந்த அருள்தந்தை மைக்கிள் தோஹர் ஆகியோருடன் சேர்ந்து மரியாயின் சேனையின் முதல் பிரசீடியத்தைத் தோற்றுவித்தார். அன்று முதல் அவரது இறுதி மூச்சு வரை (7-11-1980) சேனை உலகம் முழுவதும் பரவுவதற்கு தம் வாழ்வு முழுவதையும் வீரத்தன்மையுடன் அர்ப்பணித்தார். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பொதுநிலைப் பார்வையாளராக பங்கேற்றார். இறைவனின் மீட்புத் திட்டத்தில் தூய கன்னியின் பங்கு பற்றியும், திருச்சபையின் மறைத்தூதுப்பணியில் பொதுநிலையினரின் பொறுப்பு பற்றியும், அவருக்கிருந்த உள்ளொளியானது அவரால் இயற்றப்பட்ட இந்த சேனை நூலில் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது.

பிராங்க் டஃப் அவர்களுக்கு முத்திப் பேறு பட்டம்  அளிப்பதற்காகச் செபம்

எங்கள் தந்தையாகிய இறைவா!
உமது பணியாளனாகிய பிறாங் டவ் என்பவருக்கு கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபை என்னும் மறைபொருளை அறியும் ஆழமான ஆற்றலையும், இந்த மறைபொருளின் வழியாக திருச்சபையில் மரியாளுக்குள்ள இடத்தையும், அறியும் ஆற்றலையும் கொடுத்தீரே.

இந்த அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆவலால் தூண்டப்பட்டும், மரியாளில் அவர் அன்போடு தங்கி நின்றும் அவளுடைய தாய்க்குரிய அன்பை உலகிற்குக் காட்டும் அடையாளமாகவும், அவளுடைய பிள்ளைகள் அனைவரையும் திருச்சபையின் மறைபோதகப் பணியில் பங்கு கொள்ளச் செய்யும் ஒரு சாதனமாகவும் அவளுடைய சேனையை ஆரம்பித்தாரே.
அவருக்கு நீர் அளித்த அருள் வரங்களுக்காகவும், அவரில் விளங்கின துணிகர மான ஒளிவீசும் விசுவாசத்தின் பயனாக திருச்சபை அடைந்து வரும் நன்மைகளுக்காகவும், தந்தையே உமக்கு நன்றி கூறுகின்றோம்.

உமக்கு முன்பாக நாங்கள் வைக்கும் இந்த விண்ணப்பங்களை….... அவருடைய மன்றாட்டினால் எமக்கு அடைந்து தந்தருள வேண்டுமென்று நம்பிக்கையோடு உம்மை மன்றாடுகின்றோம்.

அத்துடன் உமது திருச்சித்சத்திற்கு ஏற்றதாக இருக்குமானால், உமது திருப்பெயரின் மகிமைக்காக அவருடைய தூய்மையான வாழ்க்கையை திருச்சபை அங்கீகரித்திட வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய
கிறீஸ்துவின் பெயரால் மன்றாடுகிறோம். ஆமென்.
 

வகை: கத்தோலிக்க பொதுநிலையினருக்கான பக்திச்சபை
மரியாயின் பக்திச்சபை


தலைமையகம்: டப்லின், அயர்லாந்து


வலைத்தளம்: www.legionofmary.ie


மரியாயின் சேனைக்கூட்டத்தில் பயன்படுத்தப்படும் மரியாவின் பீடம். சிலையின் வலப்புறம் சேனையின் சின்னம்

மரியாயின் சேனை கத்தோலிக்க திருச்சபையில் தன்னார்வம் கொண்ட பொது நிலையினரால் நடத்தப்படும் இயக்கமாகும். இது அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்லினில் ஃபிராங் டாஃப் என்ற பொது நிலையினரால் தொடங்கப்பட்டது. இப்போது கத்தோலிக்க திருச்சபையில் பொது நிலையினரால் நடத்தப்படும் மிகப்பெரிய அமைப்பாக உருவெடுத்துள்ளது. இதில் தற்போது ஏறத்தாழ 30 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள நாடுகளாக தென்கொரியா, அர்கெந்தீனா, பிரேசில், பிலிப்பீன்சு ஆகியவை உள்ளன.

வடிவமைப்பு

மரியாயின் சேனை பங்கை அடிப்படையாக கொண்ட அடிமட்ட அமைப்பு பிரசீடியம். 3-20 நபர்களை உறுப்பினர்களாக கொண்ட பிரசீடியங்கள் வாரந்தோறும் கூட்டங்கள் பிரசீடிய உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது.
பல பிரசீடியங்கள் ஒன்றிணைந்த அமைப்பு க்ரீயா ஆகும்.
பல க்ரீயாக்கள் ஒன்றிணைந்த அமைப்பு கொமித்சியம் ஆகும்.
பல கொமித்சியங்கள் ஒன்றிணைந்த அமைப்பு செனட்டஸ் ஆகும்.
பல செனட்டஸ் ஒன்றிணைந்த அமைப்பான கொன்சிலியம். இது மரியாயின் சேனையின் மிக உயர்ந்த அமைப்பாகும். இது டல்பின், அயர்லாந்தில் அமைந்துள்ளது.
 

இலங்கை தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் மரியாயின்  சேனையினர் தங்கள் 20ம் ஆண்டு நிறைவு விழாவை 08-12-2019 ல் கொண்டாடுகிறார்கள். மரியாயின் சேனையினருக்கு எமது வாழ்த்துக்கள்

இயக்குனரின் இதயத்திலிருந்து……..

மரியாயின் சேனையை வாழ்த்துகிறேன்
ஆண்டவரே என் முழு இதயத்துடன் உம்மைப் புகழ்வேன் (திபா: 9:1)

எமது தாய் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட, எமது விடுதலைப் போராட்டத்தின் விளைவாக, நம் தாய்நாட்டை விட்டு இடம் பெயர்ந்து, பல ஆண்டுகளாக பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

தேசம்விட்டு தேசம் மாறுதல் என்பது இலகுவான காரியமல்ல. எமது முழுப் பண்பாடு, வாழ்வியல் யாவுமே ஒரு சவாலுக்கு உள்ளாகி விடும். ஆனால் நம் கிறிஸ்தவ விசுவாசம் எம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப அளிக்கப்பட்டுள்ளது என்பதில் மகிழ்வடைகின்றேன்.

எமது பிரான்ஸ் ஆன்மீகப்பணியகத்தின் பக்திச் சபைகளில் மிகவும் உயிரோட்டமாகச் செயல்பட்டு 20தாவது அகவையில் கால்பதிக்கும் மரியாளின் சேனையை வாழ்த்துகிறேன். அதனுடைய வளர்ச்சிக்கும் அயராது உழைக்கும் அங்கத்தவர்களுக்கும் எனது நன்றிகள் பல கூறுகின்றேன். தொடர்ந்தும் அன்னை மரியாளின் பிள்ளைகளாக வாழ வளர வாழ்த்துகிறேன்.

அருட்பணி: போல் மதன்ராஐ; அ.ம.தி.
இயக்குனர்
இலங்கைத்தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம்


முன்னாள் இயக்குனரின் ஆசிச் செய்தி
இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தில் 1999ம் ஆண்டு மார்கழி மாதம் 8ந் திகதி அன்னையின் அமல உற்பவப் பெருவிழா அன்று, அன்றைய ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை செபஸ்தியன் அ.ம.தி. அடிகளாரினால் 9 உறுப்பினர்களுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட மரியாயின் சேனை, தற்போது 20 ஆண்டை எட்டியுள்ள இந்நாளில், 25 அங்கத்தவர்களுக்கும் மேலாக அன்னை சேனையில் அங்கத்துவம் வகித்து வருகின்றனர். பல சவால்களைக் கடந்து 20வது ஆண்டை நினைவு கூருகின்ற இந்த நாளில் அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் அடைகின்றேன்.

ஓவ்வொரு மாதமும் 2ம், 4ம் சனிக்கிழமைகளில் ஒன்று கூடி அன்னையின் புகழ்பாடி அன்னைக்கு வணக்கம் செலுத்துவதும், தங்களின் சிறிய சிறிய அறச்செயல்களால் அன்னையின் புகழ் பறைசாற்றப்படுவதையும் நானறிவேன். நடுத்தரவயது முதல் பெரியோர்வரை தவறாது அறச்செயல்களில் ஈடுபடுவது, எம் பணியகத்திற்கு பெருமையைச் சேர்க்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அத்தோடு ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு அங்கத்தவர்களின் அறச்செயல், அனுபவப்பகிர்வுகள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஆன்மீகத் தாகத்தையும், இதயப் புத்தெழுச்சியையும் தூண்டுவதாக அமைகிறது.

ஆகவே இந்த அன்னையின் புகழ்பாடும் இச்சேனையில் இன்னும் பல அங்கத்தவர்கள் இணைந்து அன்னையைப் போற்றிப் புகழ்ந்து, அவள் புகழை உலகமெங்கும் பறைசாற்ற, ஆண்டவன் துணை நின்று இவர்களை வழிநடத்த வேண்டுமென்று செபித்து, ஆசித்து மரியாயின் சேனையினரை வாழ்த்தி நிற்கின்றேன். “மரியாயின் மகிமையை அதிகப்படுத்துவதால் இயேசுவின் மகிமை குறைந்துவிடும் என்று யாரும் எண்ணவேண்டாம்” (புனித பெர்னாந்து).

அருள் தந்தை யோ. யு. கமலானந்தன் அ.ம.தி.
முன்னாள் பணியக இயக்குனர்

 

Free Blog Widget
Stats Counter
hit counter