1) துரோவாவில் பவுல் அமைதியின்றித் தவித்தது
ஏன்?
அவர் அங்கே தீத்துவைக் காணாததால். (2:13)
2) கடவுள் பாவம் அறியாத இயேசுவை பாவநிலை
ஏற்கச் செய்தது
ஏன்?
தாம் கிறிஸ்து வழியாக தமக்கு ஏற்புடையவராக மாறுவதற்காக.
(5:21)
3) மாசிடோனியாவில் பவுல் ஆறுதலடைந்தது
ஏன்?
தீத்துவின் வரவால் அவர் ஆறுதல் அடைந்தார். (7:6)
4) ஒரு மனிதன் யாரில் பெருமை கொள்ள
வேண்டுமென பவுல்
கூறுகிறார்?
ஆண்டவரில்.
5) பவுல் தூதர்களிடமிருந்து 39
சாட்டையடி எத்தனை முறை
வாங்கினார்?
5முறை (11:25)
6) பவுல் எத்தனை முறை தடியால் அடிக்கப்பட்டார்?
மூன்று முறை. (11:25)
7) பவுல் எத்தனை முறை கல்லெறியப்பட்டார்?
ஒரு முறை. (11:25)
8) பவுல் தமஸ்கு நகரில் இருந்து எவ்வாறு
தப்பித்தார்?
நகர மதிலில் இருந்து பலகணி வழியாக கூடையில் வைத்து
இறக்கப்பட்டார். (11:33)
9) பவுல் உயிரோடு இருக்கும் பொழுது
மூன்றாம் வானம் வரை
எடுத்துச் செல்லப்பட்டாரா?
ஆம். (12:2)
10) பவுல் இறுதியாக கொரிந்தியருக்குக்
கூறிய அறிவுரை என்ன?
மகிழ்ச்சியாய் இருங்கள்.
உங்கள் நடத்தையை சீர்படுத்துங்கள்
மனஒற்றுமை கொண்டிருங்கள்.
அமைதியுடன் வாழுங்கள் (13:11)