maraikal
MUM
   அருட்தந்தை

இளையோர்

 

      

Rev: Fr.S. Sebamalai Thuram  OMI
அருட்திரு: சீமோன் செபமாலை துரம் அ.ம.தி

06/03/1994 - 23/11/1997


பிறந்த திகதி: 27-12-1953

பிறந்த இடம்: பேசாலை, மன்னார் - இலங்கை

குருப்பட்டம் பெற்ற ஆண்டு: 22-08-1983

வளைபாடு இரணைதீவில் உதவி போதகராக இருந்தார்.
பின்பு பண்டத்தரிப்பு, பாசையூர் போன்ற இடங்களில் பங்குத் தந்தையாக பணி புரிந்தார்.

துறவற மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின் இந்தியாவின் தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் பணியாற்றினார்.

பதுளையில் உள்ள பட்டினவளையிலும் பங்குத் தந்தையாக இருந்தார்.

1994- 1997 - இலங்கைத் தமிழ் கத்தோலிக்கம் - பாரீஸ்சில் ஆன்மீக தந்தையாக பணி புரிந்தார். 

ஆன்மீகப் பணியகங்கள் எதுவுமில்லாத காலத்தில் பல துன்பங்களுக்கிடையில் சேவை செய்ய விரும்பி ஏற்றுக் கொண்டார்.  ஐரோப்பிய மண்ணில் புலம் பெயர்ந்த தமிழ்  மக்களுக்காக முதன்முதலாக, ஆன்மீகப்பணியாற்ற வந்த பெருமை நமது அருட்தந்தை: துரம் செபமாலை அ.ம.தி. அடிகளாரையே சாரும்.

பிரான்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் மன்றத்தின் வேண்டுகோளின் பயனாக. அ.ம.தி. சபைக் குருக்கள் பிரான்ஸ் நாட்டில். இலங்கைத் தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மீகப்பணி புரிய உத்தியோக பூர்வமான உரிமை கிடைத்தது. இவ்வகையில். அருட்தந்தை அவர்கள் 1993 பங்குனி மாதம் இப்பணியினைத் தொடக்கி வைத்தார். அருட்சகோதரி அன்ரநீற்றா அவர்களின் வழிநடத்துதலின் கீழிருந்த அருட்பணியாளர்களின் சேவை நிர்வாகம் அவரது வருகையுடன் இலங்கைத் தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்கான ஆன்மீகப் பணியக இயக்குனரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

பல்வேறுபட்ட எதிர்ப்புக்களையும் இன்னல்களையும் இறை வல்லமையால் தாங்கி, மக்களின் ஆன்மீக வழிகாட்டலின் பாதையைச் செம்மையாக்கி, இன்றைய எமது ஆன்மீகப் பணியக நிர்வாகத்திற்குத் திடமான அத்திவாரம் இட்டமை, அவரது பணியின் சிறப்பாகும்.

எமது நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து புலம் பெயர்ந்து, மேலைநாட்டுக் கலாச்சாரங்களின் தாக்கத்தி னால் பல்வேறு மனநிலைகளைக் கொண்ட மக்களின் மத்தியில் ஒரே குடும்ப உறவினை வளர்க்க, அனைத்துத் தரப்பிலுமிருந்தும் மக்கள் பணியாளர்களைத் தேர்ந் தெடுத்து 30.10.1994-ல் பிரான்ஸ் வாழ் இலங்கைத் தமிழ்க் கத்தோலிக்கரின் ஆன்மீக நலன்புரிச்சபையை உருவாக்கி, ஆன்மீகத் திட்டமிடலுடன் அவர் ஆற்றிய அரும் பணி, அவரது குருத்துவப்பணி வாழ்வில் மிகவும் முக்கியமானது
 

Aubervilliers - St.Martha ஆலயத்தில் தமிழில் முதன் முறையாக பாரிசை விட்டு (வெளிமாவட்டத்தில்) திருப்பலி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து

- Sarcelles

- Le Pereaux

போன்ற பங்குகளிலும் திருப்பலி நிகழ்த்தினார்.

இவர் ஆன்மீகத் தந்தையாக பணிபுரிந்த வேளை நடை பெற்ற இவரின் செயல்பாடுகள்:

‘செபமாலை வழியில் இறைவனிடம் செல்வோம்’ என்று அழைப்பு விடுத்த அருட்தந்தை அவர்கள் குடும்பப் பெண்கள் மரியன்னை வழியில் வாழ்க்கையை அமைக்க வேண்டுமென்ற நோக்குடன் 10.05.1995-ல் ‘மாதா கூட்டத்தை’ உருவாக்கினார்.

 சிறுவர் திருவருட்சாதனங்களை தகுந்த ஆயத்தங்களுடன் முறையாகப் பெறுவதற்கு, மறைக் கல்வி நூலைத் தானே எழுதி வழங்கியும், மறைக்கல்வி வகுப்புகளின் மூலமும், 28.08.1994-ல் முதன் முறையாக பத்தொன்பது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியில் முதல்நன்மைத் திருவருட்சாதனம் அருளப்பட்டது.


 - திருப்பலிகள்
 - புனிதர்களின் திருவிழாக்கள்
 - பாடகர் குழு
 - இளைஞர் மன்றம் (Eugène de Mazenod)
 - மேய்ப்புப் பணிக்குழு
 - திருமண ஆயத்த வகுப்புக்கள்
 - திருமுழுக்கு
 - அருட்பணித் திட்டமிடல்
 - ஒன்றுகூடல்கள் 
 - கருத்தரங்குகள் 
 - கலைவிழாக்கள்
 - யாத்திரைகள்
1995 ஆவணி முதல் வாரம் லூர்து அன்னை திருத்தல யாத்திரை
27.08.1995-ல் லிசியு (Liseux) புனித திரேசம்மா திருத்தல யாத்திரை
21.01.1996-ல் புனித பூமி இஸ்ராயேல் நாட்டுக்கான திருயாத்திரை
15.07.1997-ல் போர்த்துக்கல் நாட்டுப் புனித பத்திமா அன்னை திருத்தல யாத்திரை

 

இவர் காலத்தில் றொபேட் அந்தோனிப்பிள்ளைஎன்பவரை ஒரு அருட்பணியாளராக ஆக்கிய பெருமை இவரையே சாரும்.

"இறையுறவில் வளர இசைப்போம்" என்ற பாடல் புத்தகத்தை மே 1995ல் அச்சிட்டு வெளியிட்டார்.

இவர் காலத்தில் நிறைய (15 - 20) ஆண் பெண்களைச்  சேர்த்து பாடகர் குழு ஒன்றை உருவாக்கினார்.

மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றவும், இறை-மனித உறவுகள் ஆழமாகி உண்மையான மகிழ்ச்சி மலரவும் «உறவுகள் மலரட்டும்» என்ற முதலாவது உறவு மலர் 25.12.1994-ல் வெளியாகியது.

அருட்பணியாளர் செபமாலை துரம் அவர்களின்
குருத்துவத் திருப்பணி வெள்ளி விழா

 



அருட்திரு செபமாலை துரம் அடிகளாரின் முதல் திருப்பலி கொன்கூர்ட் ஆலயத்தில் - 06-03-1994


1993 - இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய அங்கத்தவர்கள்

 

பாடகர் குழாம் 1994ல்

 
 
 

 

Free Blog Widget
Stats Counter
hit counter