maraikal
MUM
 
             

இளையோர்


 

 
    சேனையாளர்கள் சேவைகள்

மரியாயின்சேனை - Legion of Mary


வீட்டில் உள்ள நோயாளிகளையும், முதியவர்களையும், இன, மொழி வேறுபாடின்றி எல்லோரையும் சந்தித்து, ஜெபித்து ஆறுதல் கூறி வருவது.

போதைத்தரும் பொருட்களை பயன்படுத்துவோர் அதிலிருந்து விடுபட முடியாமல் இருக்கிறவர்களை சந்தித்து ஜெபித்து அறிவுரையும் கூறுவது.

இறந்தவர் இல்லம் சென்று இறந்தவர்களுக்காக ஜெபித்து திருப்பலியிலும் கலந்து கொள்வது.

மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளையும் சந்தித்து ஜெபித்து ஆறுதல் கூறுவது.

பிரச்சனையில் இருக்கும் குடும்பங்களை சந்தித்து, ஜெபித்து அறிவுரை கூறி சமாதானப்படுத்துவது.

சவுல், புனித பவுலாக மாறியதுபோல் உலகில் உள்ள எல்லா பாவிகளும் மனம் திரும்பவும் ஜெபிப்பது.

ஆத்துமாக்கள் மாதம் (நவம்பர்) சேனையில் இருந்து இறந்து போனவர்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுப்பது.

ஆலயத்தில் தினமும் பொதுக்கருத்துக்காகவும், தவக்காலத்தில் வியாழன் 1 மணிநேரம் ஆராதனையும் செய்யலாம்.

கிறிஸ்தவ, பிற மத சகோதரர்களுக்கும் மருத்துவ உதவி செய்யலாம்.

கிறிஸ்தவ பிற மத சகோதரர்களுக்கும் புனிதர்கள் விவிலியம் பற்றிய கருத்துக்களை கூறி, ஜெபங்கள் உள்ள படங்கள் புதுமை எண்ணெய்கள் கொடுத்து ஜெபிக்க கூறலாம்.

இளைஞர்கள் பொது சேவை செய்தூண்டுவது.

ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆதரவு இல்லாதவர்களுக்கு கூட சென்று உதவுவது.

அக்டோபர் மாதம் 153 மணி ஜெபமாலை, அர்ப்பண ஜெபமும் செய்வது.

பிள்ளைகளினால் பிரச்சனையாக இருந்த குடும்பத்தை சந்தித்து அறிவுரைக் கூறுவது.

17விபுதி புதன் (சாம்பல் திருவிழா) ஆலயத்திற்கு வர இயலாமல் இருக்கும் கிறிஸ்தவ நோயாளிகளுக்கு சாம்பல் கொடுத்து உதவுவது.

விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்வதை விட துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது என சபை உரையாடல் (7 – 2) நூலில் கூறப்பட்டுள்ளது போல நாங்கள் இறந்தவர் வீட்டிற்குச் சென்று இறந்தவருக்காக ஜெபித்து கல்லறை வரை சென்று வருகின்றோம்.
வீட்டிலுள்ள நோயாளிகளையும், முதியவர்களையும் ஜாதி மத பேதமின்றி அனைவரையும் சந்தித்து ஜெபித்து ஆறுதல் கூறி வருவது.
போதைக்கு அடிமையானவர்களை சந்தித்து அவர்களுக்கு அறிவுரைக்கூறி குடிப்பழக்கத்திலிருந்து விடுபட ஜெபிப்பது. அவர்களையும் ஜெபிக்க ஊக்குவிப்பது.

மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி ஜெபித்து உதவியும் செய்வது.

கோவிலுக்கு வருடக்கணக்காய்; வராதவர்களை திருப்பலிக்கு வரச்செய்து பாவ சங்கீர்த்தனம் செய்து திவ்ய நற்கருணை உட்கொள்ள செய்வது.

ஜாதி மத பேதமின்றி பிரச்சனையில் இருக்கும் குடும்பங்களை சந்தித்து அறிவுரையும் ஆறுதலும்கூறி சமாதானம் செய்து வருவது.

பாவிகள் மனந்திரும்ப தினமும் ஜெபமாலை ஜெபித்து ஒப்புக் கொடுப்பது.

கவனிக்க ஆள் இல்லாமல் தனிமையில் தவிக்கும் படுக்கை நோயாளியை சந்தித்து அவர்களைகுளிப்பாட்டி, உணவூட்டி, உதவி செய்து கவனிப்பது.

ஏழைகளுக்கு, உதவித் தேவைப்படுவோருக்கு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ உதவி செய்வது.

மற்றும் சிலருக்கு அரிசி, தேங்காய், பணம் கொடுத்து உதவுவது.

சேனையிலிருந்து இறந்து போனவர்களுக்கு திருப்பலி ஒப்புக் கொடுத்து ஜெபிப்பது.

முதியோர் இல்லம், ஊனமுற்றோர் இல்லம் சென்று அவர்களை பார்த்து பேசி உதவிசெய்வது.
மரியாயின்சேனை அங்கத்தவர்கள்

 

Free Blog Widget
Stats Counter
hit counter