|
|
|
தானியேல் | |
1)தானியேலைப் பற்றி விளக்குக: * தானியேல் எனும் பெயரின் பொருள் "கடவுள் என் நீதிபதி" * தானியேல் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் דָּנִיֵּאל, Daniyyel, Dāniyyel) என்னும் பெயர் கொண்டது. * தானியேல் தீர்க்கதரிசன நூலில் உள்ள முக்கிய பாத்திரம் "தானியேல்" ஆவார். * எருசலேமில் அரச பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். * தானியேல் சிறுவனாக வாலிபவயதில் இருக்கும்போது நேபுகாத் நேச்சாரால், பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர் *அரசனால் "பெல்தெஷாத்சார்" (பொருள்- பேல் தேவனின் பிரபு) என்று பெயர் மாற்றப்பட்டாலும், தானியேல் ஒருபோதும் பாபிலானிய முறைக்கு மாறவில்லை. * 4 அரசர்களுக்கு, தலைமைச் செயலாளராக அரசவைப் பதவி வகித்தவர். * கர்த்தர் அருளிய "தெய்வீக ஞானம்" மூலம் அரசனின் கனவுகளையும் தரிசனங்களையும் தெளிவுபடுத்தி, பாபிலோனிய சபையில் முக்கிய நபராகினார். * தேவதரிசனத்தினைக் கண்டு, அதன் பொருளை நான்கு பேரரசுகளாக விளக்கி, ராஜாதிராஜா இயேசு கிறிஸ்துவின் ராஜ்ஜியமே என்றும் நிலைத்திருக்கும் என்று கண்டார். 2) தானியேல் என்னும் நூல் எப்பொழுது எழுதப்பட்டது? யூதர்கள் வேற்றினத்து மன்னனால் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட போது எழுதப்பட்டது. கி.மு. 167ல். 3) தானியேல் நூலைப்பற்றி விபரிக்குக. இந்நூல் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பிரிவு 1: தானியேலும் அவருடைய தோழர்களும் கடவுள்மீது அசையாத நம்பிக்கை கொண்டு அவர்தம் கட்டளைகளுக்குப் பணிந்து நடந்ததால் தங்கள் எதிரிகளை மேற்கொண்டனர். இப்பகுதியில் காணப்படுபவை பாபிலோனிய, பாரசீகப் பேரரசுகளின் வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன. பிரிவு 2: தானியேல் கண்ட காட்சிகள் பாபிலோனியப் பேரரசு தொடங்கி அடுத்துவரும் எல்லாப் பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டும் உருவகங்களாக அமைந்து, வேற்றினத்துக் கொடுங்கோலனின் வீழ்ச்சியையும் இறைமக்களின் வெற்றியையும் முன்னுரைக்கின்றன. 4) இந்நூலின் நோக்கம் என்ன? தானியேல், பாபிலோனிய மன்னன் கீழ் துன்பப்பட்டதுபோல், துன்பப்பட்ட யூதர்களுக்கு நம்பிக்கை வழங்குவதற்காக. 5) மன்னனுக்கு பணி புரிய நியமிக்கப்பட்டவர்கள் யாவர்? தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா (1:11) 6) தானியேலுக்குக் கொடுக்கப்பட்ட மாற்றுப்பெயர் என்ன? பெல்தசாச்சர் (1:7) 7)அரசன் பாபிலோனில் இருந்த எல்லா ஞானிகளையும், அழிக்க ஆணையிட்டது ஏன்? அவர் கண்ட கனவின் பொருளை, அவர்களால் சொல்ல இயலாததால். (2:5) 8) தானியேல் அரசரின் கனவுக்கு பொருள் கூறினாரா? ஆம். (2:46) 9) மன்னனின் கனவு என்ன? மன்னர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம் மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது. அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது. அதன் மார்பும் புயங்களும் வெள்ளியால் ஆனவை. வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை. அதன் கால்கள் இரும்பினால் ஆனவை. அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும் மறுபகுதி களிமண்ணாலும் ஆனவை. நீர் அச்சிலையைப் பார்த்துக்கொண்டிருந்த பொழுது, மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு வந்தது. அந்தக் கல் இரும்பினாலும் களி மண்ணாலுமான அதன் காலடிகளில் வந்து மோதி அவற்றை நொறுக்கியது. அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவையாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று. (2:31-35) 10) சுவற்றில் பொறிக்கப்ட்ட சொற்கள் என்ன? "மேனே மேனே, தேகேல், பார்சின்" (6:25) 11) இச் சொற்களின் உட்பொருள் என்ன? மேனே; கடவுள் எமது அரசின் நாட்களை எண்ணி வரையறுத்து அதனை, முடிவுக்கு கொண்டு வந்து விட்டார். தேகேல்; நீர் தராசில் நிறுக்கப்பட்டீர், எடையில் மிகவும் குறைந்துள்ளீர். பார்சின்; உமதுஅரசு பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.(5:26-28) 12) தானியேல் சிங்கக் குகைக்குள் தள்ளப்பட்டது ஏன்? அரசரின் சட்டத்தை மீறி, மூன்றுவேளையும் வேண்டுதல் செய்து வந்ததால். (6:13) 13) தானியேல் எவ்வாறு காப்பாற்றப்பட்டார்? கடவுள் தம் தூதரை அனுப்பி, சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். (6:22) 14) தானியேல் 2:19-23 ல் கூறியது என்ன? தானியேல் விண்ணகக் கடவுளை வாழ்த்திப் போற்றினார். அவர் கூறியது: கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழ்த்தப்படுவதாக! ஏனெனில், ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியன! காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவர் அவரே! அரசர்களை விலக்கி மாற்று அரசர்களை நிலைநிறுத்துபவர் அவரே! ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவர் அவரே! அறிவாளிகளுக்கு அறிவை அருள்பவர் அவரே! ஆழ்ந்த மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் அவரே! இருளில் உள்ளதை அறிபவர் அவர்! ஒளியும் வாழ்வது அவருடனே! எங்கள் தந்தையரின் இறைவா! உமக்கு நன்றியும் புகழும் கூறுகின்றேன்; ஏனெனில் எனக்கு ஞானமும் ஆற்றலும் தந்தவர் நீரே! நாங்கள் உம்மிடம் கேட்டதை இப்பொழுது எனக்குத் தெரியப்படுத்தியவர் நீரே! அரசனது காரியத்தை எங்களுக்கு அறிவித்தவரும் நீரே!" |
|
Stats Counter hit counter |