maraikal
MUM
"
தவக்காலப் பாடல் Mp3
மனிதன் இதோ
 
பாவம் என்பது
 
என் இறைவா
 
பாவி என்மேல்
 
சிலுவை மரம
 
பாவம் என்பது
 
கல்வாரிக்குப்
போகலாம்
 
புனித வாரப்பாடல்கள்
தாவீதின் மகனுக்க
எபிரேயர்களின்
கிறீஸ்து அரசே
ஆண்டவர் புனித நகரத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தவக்காலம் என்பது இரக்கத்தின் காலம்

தவக்காலம் என்பது இரக்கத்தின் காலம், மன மாற்றதின் காலம்,

நாம் இறைவனைவிட்டு பிரிய கரணமாய் இருந்த பாவ செயல்களை நினத்து வருந்தும் காலம்,

அந்த பாவங்களை மீண்டும் செய்யாமல் இருக்க நம் உள்ளத்தை தயார்படுத்த மன்றாடும் காலம்,

நாம் இறந்த பிறகு நமக்கு நீதி கிடைக்க உதவும் காலம்,

மண்ணிலிருந்து பிறந்த நாம் திரும்ப மண்ணுக்கே செல்ல வேண்டும் என்பதை நினைவூட்டும் காலம்,
 

 

நோன்போடு சேர்ந்த மனமாற்றத்தையே தவக்காலம் நமக்கு வலியுறுத்துகின்றது

மீட்பின் காலம், அருளின் காலம், செபத்தின் காலம் மனமாற்றத்தின் காலம் என்ற அறைகூவலை விடுக்கும் தவக்காலத்தில் நாம் நுழைந்துள்ளோம். “நீங்கள் உங்கள் உடைகளை கிழித்துக்கொள்ள வேண்டாம்.

இதயத்தை கிழித்துக்கொண்டு உங்கள் ஆண்டவராகிய இறைவனிடம் திரும்பி வாருங்கள்” என்று இறைவாக்கினர் யோசேவ் கூறுகின்றார். (யோசேவ் 2:12-13) ஆகவே பாஸ்கா திருவிழாவைக் கொண்டாட விசுவாசிகள் தங்களை முழு மனதுடன் ஆயத்தம் செய்யும் காலம் தான் தவக்காலம்.

 

நம் ஆண்டவர் நாற்பது நாட்கள் நோன்பிருந்தார் என்று நற்செய்தி கூறுகின்றது.

பழைய ஏற்பாட்டில் நாற்பது நாள் வெள்ளப்பெருக்கு, இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் பயணம் செய்த நாற்பது ஆண்டுகள், மோசே நாற்பது நாள் நோன்பிருந்து மன்றாடியது, இறைவாக்கினர் எலியா ஒரேப் மலைக்கு செல்ல எடுத்துக்கொண்ட நாற்பது நாட்கள், நினிவே மக்கள் உண்ணா நோன்பிருந்த நாற்பது நாட்களையும் குறிக்கின்றது.

பழைய ஏற்பாட்டில் சுவையான உணவு, இறைச்சி, திராட்சை இரசம் ஆகியவற்றை கைவிட்டு நோன்பிருந்த தானியேலுக்கு ஆண்டவரின் திருக்காட்சி அருளப்பட்டதாக தானியேல் 10:2-3 வசனங்களில் காண்கின்றோம்.

புதிய உடன்படிக்கையில் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் நோன்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தேயூ 4:1-11, லூக் 4:1-13 அவர் தூய ஆவியால் நிரப்பப்பட்டவராய் பசாசை வென்றார். பழைய இஸ்ராயேல் மக்கள் பாலை நிலத்தில் மூன்று சோதனைகளிலும் வெற்றிகாணவில்லை. ஆனால் புதிய இஸ்ராயேலின் தலைவரான இயேசு வனாந்தரத்தில் மூன்று சோதனைகளிலும் வெற்றி பெறுகின்றார்.

இவரது வெற்றிக்கு நோன்பு, செபம், இறைவார்த்தையின் வல்லமை இவையே காரணமாக அமைந்தது. ஆண்டவர் யேசு மலைப்பொழிவில் நோன்பு எவ்வாறானதாக அமைந்திட வேண்டுமென்று கற்பிக்கின்றார். அது வெறும் வெளிவேடச் சொல்லாகிவிடக்கூடாது. மத்தேயு (6:16-18)

முதல் கிறிஸ்தவர்களுக்கு நோன்பும், மன்றாட்டும் ஆற்றல் அளிப்பதாக இருந்தன. திருத்தூதர்களான பவுல், பர்னபாவையும் நோன்பிருந்து திருப்பணியில் அமர்த்தினர். (தி.ப. 12:3) அவர்கள் நோன்பிருந்து செபித்தே மூப்பர்களைத் தேர்ந்தெடுத்தனர். (தி.ப. 14:23)

திருத்தூதர் பவுல் தனது பணி வாழ்வில் தான் அடைந்த இன்னல்களை தமது திருமுகத்தில் குறிப்பிட்டுள்ளார். (2 கொரி 11:27, 6:5) கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் பட வேண்டிய வேதனையை நாம் நம் உடலில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார். (கொலோ 1:24) தூய்மையான வழி நோன்பு என்று புனித ஏப்ரம் கூறுகின்றார்.

திரு முழுக்கு, பாவப்பரிகாரம் ஆகிய இரண்டிற்கும் சரியான ஆயத்தம் தேவை. அப்போதுதான் உண்மையான விதத்தில் உயிர்ப்பு விழாவை கொண்டாட முடியும். அதற்கு நோன்பு அவசியம். நோன்பு பாவத்தை போக்குகிறது என்று இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு எடுத்தியம்புகிறது.

வெறும் நோன்பினால் எவ்வித பயனுமில்லை என்பதை நாம் உணர்ந்து எமது பழைய பாவ வாழ்வை களைந்து புதிய இதயத்தை அணிந்து கொண்டால்தான் நோன்பு பலன் தருமென்று புனித லொயோயா கூறுகிறார். ஆகவே தவக்காலத்தில் மாமிச உணவை மட்டுமல்ல, பாவத்தையும் தீய செயல்களையும் கைவிட்டு வாழ முயற்சி எடுப்போம்.


 


 

 
Free Blog Widget
Stats Counter
hit counter