maraikal
MUM
   அருட்தந்தை

இளையோர்

 

Rev:Maria Sebastien SANTHIAPILLAI. OMI
அருட்திரு: மரியா செபஸ்தியன்
 சந்தியாப்பிள்ளை - அமதி
 

அர்ப்பணப் பணி மலர்
அருள்பணி. ச. மரியசெபஸ்தியன் அ.ம.தி

07/12/ 1997 - 24/08/2003


பிறந்த திகதி: 19-01-1956

பிறந்த இடம்: இளவாலை - இலங்கை

குருப்பட்டம் பெற்ற ஆண்டு: 24-04-1986
 

1987- 1989 - யாழ்போதனா வைத்தியசாலையில் 
                      ஆன்மீகக் குருவாக பணியாற்றினார்.

1990- 1996  -  7   வருடங்கள் மறை உரைஞராகவும்
             
         கிளிநொச்சியிலும், மன்னாரிலும் ஆன்மீக 
                      குருவாக பணிபுரிந்தார்.

1997-2003 - இலங்கைத் தமிழ் கத்தோலிக்கம் - பாரீஸ்   
                   ஆன்மீக இயக்குனராக பணிபுரிந்தார்.                 

2003-2006 - கருத்துரை வழங்கல் சம்பந்தப்பட்ட படிப்பை
                     கனடாவில் மேற்கொண்டார்.

2006-2008  - கொழும்புத்துறையில் அமைச்சு சம்பந்தமாக
                      படிப்பை மேற்கொண்டார்

2008            - அமைதி தென்றலில் Director ஆக  பணி
                      புரிந்தார்.

 

Paris
1997- 2003 - இலங்கைத் தமிழ் கத்தோலிக்கம் -பாரீஸ்சில் ஆன்மீக தந்தையாக பணிபுரிந்தார். 

பாரிஸ் கொன்கூர்ட் ஆலயத்தில் இவரின் முதல் திருப்பலி 07- 12- 1997ல் இனிதே நடைபெற்றது

புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர விலாசம் இல்லாமல் இருந்த காலகட்டம் அது. எமது ஆன்மீகப் பணியக இயக்குனரின் முயற்சியினால், பாரிஸ் மறை மாவட்ட ஆயர், மற்றும் மேலதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, 1998ம் ஆண்டு ஆனி மாதம் 28ந் திகதி ஞாயிறு பிற்பகல் 6.30 மணிக்கு Rue de la Roquette, Mo. Bastille இல் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில், 2ம் தளத்தில் எமக்கென்று பணியகம் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அன்று எம்மை 'அங்கீகரித்த தினம்' என்றும் கருதலாம்.

பின்னர் எமது செயற்பாடுகளையும், ஒத்துழைப்பையும் உணர்ந்த பாரிஸ் மறை மாவட்ட ஆயர் அவர்கள்,  எமக்கென  நிரந்தரமாக    57, Bd de Belleville, 75011 PARIS. என்னும் இடத்தில் அமைந்துள்ள NOTRE DAME RECONCILIATRICE என்னும் ஒரு சிற்றாலயம்,  பணிமனை, பணியகம், ஒன்றுகூடல் மண்டபம், யாவையும் உள்ளடக்கிய கட்டிடத் தொகுப்பை, 1999ம் ஆண்டு ஐப்பசிமாதம் 30 திகதி எமக்கு உத்தியோக பூர்வமாகக் கையளித்தார்கள். இது ஐரோப்பாவில் முதன்முதல் எமக்குக் கிடைத்த அருங்கொடையாகும். தமிழ் மொழியில் திருப் பலியை ஒப்புக்கொடுக்கும் பாக்கியம் கிடைத்தது, மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

இவர் ஆன்மீகத் தந்தையாக பணிபுரிந்த வேளை நடைபெற்ற இவரின் செயல்பாடுகள்:

 - திருப்பலிகள்

 - புனிதர்களின் திருவிழாக்கள்

 - மரியாயின்சேனை

 - புனித சூசையப்பர் பாடகர் குழு

 - அன்பியம்

 - இளைஞர் மன்றம் (Eugène de Mazenod)

 - மேய்ப்புப் பணிக்குழு

 - திருமண ஆயத்த வகுப்புக்கள்

 - திருமுழுக்கு

 - கருத்தரங்குகள்

 - அருட்பணித் திட்டமிடல்

 - ஒளிவிழா

 - தாய் நாட்டுடனான நிதி உதவி


 - யாத்திரைகள்

       - லூட்ஸ் (Santoire Lourdes)

       - பாத்திமா (Fatima)

       - சார்ட் (Chartes)

       - மஜகோரி (Medjugorje)

       - லிசியு  (Liseux)

       - கேவிலார் - (Germany)

        - பெல்ஜியம் (Benneaux)

       - 2000 யூபிலி ஆண்டில் - வத்திக்கான் (Vatican)  
                                               ஜெருசலேம் (Jerusalem)

பன்னாட்டு மக்களின் கத்தோலிக்க சேவை மையம் (S.N.P.M.) 10 -15 சேர்த்த அருட் தந்தையர்களின் கூட்டத்திற்கு தவறாமல் போதல்


1999-08-08 - 9 அங்கத்தவர்களுடன் அமலோற்பவ
                   அன்னை பிரசீடியம்மரியாயின் சேனை என்ற
                   பக்திச்சபையை தொடக்கி  வைத்தார்.

30-10-2000 ல் உறவுகள் என்ற பத்திரிகை ஒரு குழுவைத் தெரிந்தெடுத்து முதலாவது இதழையும் வெளியிட்டார்.

நமது ஆன்மீகத் தந்தையவர்கள் TRTதமிழ் ஒலி - தமிழ் அலை வானொலி - ஈழநாடு - TRT தொலைக்காட்சி இவர்களுடன் நல்ல உறவுகள் வைத்திருந்தார்.

TRT தொலைக்காட்சியில் உறவுகளின் சங்கமம் என்ற வாராந்த நிகழ்ச்சியை நடாத்தினார்.  

பிரான்ஸ் நாட்டுக்கு வருகை தந்த காலத்தில் இருந்து, இன்றுவரை கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்த கழகங்கள், மன்றங்கள், பழைய மாணவர் ஒன்றியங்கள் போன்றவற்றின் வளர்ச்சிக்கு இவர் கரம்பிடித்து நடத்தியுள்ளார். ஆன்மீகப்பணி மட்டுமல்ல, சமூகப் பணியிலும் ஆர்வம் காட்டி நின்றார்.

அவருடைய காலத்தில் இருந்த 11 பணித்தளங்களிலும்  
 - Paris
 - Aubervillies
 - Créteil
 - Clichi sous Bois
 - sarcelles
 - Chelles
 - Noisy-Champs
 - senart
 - Sevron
 - Lepereaux
 - Aulnay Sous Bois  போன்ற இடங்களில் திருப்பலியை  சிறப்பாக ஆற்றினார். அதைவிட Lyon, nantere, Bodeaux, Nevres, Toulouse, Mulhouse, Albi போன்ற வெளி இடங்களிலும் திருப்பலி நிகழ்த்தினார்.

 

 - வருடாந்த பங்களிப்பு

1999ம் ஆண்டு ஆவணி மாதம் 15ந் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், பிரான்ஸ் வாழ். ஓவ்வொரு தமிழ் கத்தோலிக்கருக்கும் இப்பணியகம் சொந்தம். இதைத் தாபரிக்க, பணியாளர்களைத் தாபரிக்க, எமக்குக் கட்டாய கடமையுண்டு, என்று அறிவுறுத்தப்பட்ட தினம். இத்திட்டத்தை முன்னின்று செயல்படுத்திய ஆன்மீகப் பணியக இயக்குனர் அருட்பணி. ச. மரிய செபஸ்தியன் அடிகளாருக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

 31-10-2000 ல் ஒப்புரவு அன்னை திருவிழா அன்று ஒரு வருட நினைவாக முதலாம் ஆண்டு மலர் என்ற பெயரில் புத்தகம் ஒன்று வெளியிட்டிருக்கிறார்

         கிடைக்கப்பெற்ற ஒரு சில நினைவுகள்


31-10-1999
 ஒப்புரவு அன்னை ஆரம்பத் திருநாள் திருப்பலி



Gardnaj Lustiger தமிழ் கத்தோலிக்க மக்களுடன் சேர்ந்து நிறைவேற்றிய திருப்பலி
 

T.R.T. தமிழ் ஒலி ஒளி பரப்பில் உறவுகளின் சங்கமம் நிகழ்வின்போது

 

Sevran மேய்ப்புப் பணி அங்கத்தவர்கள் ஆலய பங்குக்குருவுடன்

 

Paris - மேய்ப்புப் பணி அங்கத்தவர்கள் 1998 -2000

 

 

 

 

 

 

 

 

 

 

                 

 

Free Blog Widget
Stats Counter
hit counter